சசிகலா, ஓபிஎஸ், நீங்க எல்லாரும் சேர்ந்து தேர்தலை சந்திக்கின்ற வாய்ப்பு இருக்கின்றதா ? என்ற கேள்விக்கு பதிலளித்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், இது எல்லாம் அனுமானத்துல கேள்வி கேக்குறீங்க. இதுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது. நான் சொன்னது அதுதான்… நானும் ,  நண்பர் ஓபிஎஸ்ஸும்  சேர்ந்து வருங்காலங்களில் அரசியலில் பயணிப்போம்.

பிஜேபி கூட்டணியில் அதிமுக இருக்கும் பட்சத்தில் அமுமுக இடம் பெறுமா ? அதெல்லாம் தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும். புதிய விடியல் ஏற்படும் என சசிகலா சொன்னது பற்றி நீங்கள் சசிகலாவரை பார்க்கும்போது கேளுங்கள். நான் அவுங்க சார்பாக பேசக்கூடாது. 2019 தேர்தல் வேற. அந்த காலகட்டத்தில் இருந்த நிலைமை வேற.

அண்ணன் நம்ம மாவீரர் பழனிச்சாமி ஆட்சியில மக்கள் கொதிப்படைந்து…  அவருடைய தவறான ஆட்சி முறையால் மக்களின் எதிர்ப்பு உணவை காண்பிப்பதற்காகத்தான்…  2019 தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவளித்தார்கள். அதேபோல 2021 அது மாதிரி தான் நடந்துச்சு.

ஆனால்  ரெண்டரை ஆண்டுகளில்  பழனிச்சாமியையும் தாண்டி, அவருக்கு அண்ணனா ? என  திரு. ஸ்டாலின் இன்னைக்கு தமிழ்நாடு மக்கள் மத்தியில் கோபத்துக்கு ஆளாகி இருக்கிறார். அதனால் இந்த பாராளுமன்ற தேர்தல்…   வருகின்ற 2026 சட்டமன்ற பொதுதேர்தல் என்பது திமுகவை எதிர்த்து மக்கள் வாக்களிக்கின்ற தேர்தல்.

அதில் உறுதியாக தமிழ்நாட்டு மக்கள் திமுகவுக்கும் – பழனிச்சாமிக்கும் மாற்றாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை ஏற்றுக் கொள்வார்கள் என்ற நம்பிக்கையில் நாங்கள் பயணிக்கின்றோம் என தெரிவித்தார்.