தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் அஜித் அண்மையில் வினோத் இயக்கத்தில் துணிவு திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் சென்ற மாதம் தியேட்டரில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றது. இந்த படத்தில் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, ஜிஎம் சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் என பலர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்கள்.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பின் இடையே நடிகை மஞ்சு வாரியார் அஜித்துடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்தார். அப்போது எடுத்த புகைப்படங்களும் வைரலானது. இந்த நிலையில் மஞ்சு வாரியர் பைக் ஒன்று வாங்கியிருக்கின்றார். இவர் நடிகர் அஜித்திற்கு நன்றி கூறி பதிவு ஒன்றை பகிர்ந்து இருக்கின்றார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது, தைரியத்திற்கான ஒரு சிறிய படி எப்போதும் சிறந்தது. ஒரு நல்ல இயக்குனராகுவதற்கு முன்பாக நிறைய கற்றுக்கொள்ள வேண்டும். அதனால் சாலையில் நான் தடுமாறுவதை நீங்கள் கண்டால் தயவு செய்து பொறுத்துக் கொள்ளுங்கள். என்னை போன்றவர்களுக்கு ஊக்கம் அளிப்பதற்கு நன்றி அஜித் சார் என பதிவிட்டு இருக்கின்றார். இவரின் இந்த ட்விட்டர் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.