
விஜய் தொலைக்காட்சிகளில் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. அந்நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக இருக்கும் மணிமேகலை நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியுள்ளார்.
இதைத் தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒரு தொகுப்பாளினி தான் வெளியேறுவதற்கு காரணம் என்று வீடியோ வெளியிட்டு இருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலான நிலையில் தொகுப்பாளினி பிரியங்கா தான் அதற்கு காரணம் என்று பலரும் கூறுகின்றனர். இதுகுறித்து அதே நிகழ்ச்சியில் கோமாளியாக இருக்கும் குரேஷி மணிமேகலைக்கு ஆதரவாக பதிவு போட்டு திடீரென அந்த பதிவை குரேஷி அழித்துள்ளார்.
மேலும் எதிர்மறையான கருத்துக்கள் பரவுவதை தடுக்க நான் போட்ட பதிவை டெலிட் செய்தேன் என்றும் காரணத்தை தனது youtube வீடியோவில் கூறியுள்ளார்