ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமானது மலிவான விலையில் பல்வேறு ரீசார்ஜ் திட்டங்களை வழங்கிவந்த நிலையில், இப்போது நாட்டில் தன்  நிறுவனத்தின் முதல் லேப்டாப்பை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த லேப்டாப் ஏற்கனவே விற்பனைக்கு வந்தாலும் அனைத்து தரப்பினராலும் வாங்க முடியாத சூழ்நிலை இருந்தது. அரசாங்கத் துறைகள் மட்டுமே GeM போர்ட்டல் வழியே ஷாப்பிங் செய்ய முடியும் எனும் நிலை இருந்து வந்தது. கூடிய விரைவில் இது பொதுமக்களுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை ரூ.19,500 ஆகும். ஜியோ புக் ஏற்கனவே இந்தியா மொபைல் காங்கிரஸ்(IMC), 2022ன் 6வது எடிஷனை காட்சிக்கு வைத்து உள்ளது.

இ-மார்க்கெட்பிளேஸ் இணையத்தில் ஜியோ நிறுவனத்தின் லேப்டாப் குறித்த விவரங்கள் குறிப்பிடப்பட்டு உள்ளது. லேப்டாப் குவால்கம் ஸ்னாப்ட்ராகன் 665 ஆக்டா-கோர் ப்ராஸசர் வாயிலாக இயக்கப்படுகிறது. இவை ஒரு நிலையான ஃபேக்டர் மற்றும் மெட்டாலிக் ஹிங்க்ஸ் உடன் வருகிறது. இதில் உள்ள சேஸிஸ் ஏபிஎஸ் பிளாஸ்டிக்கால் ஆனது மற்றும் லேப்டாப் நிறுவனத்தின் சொந்த ஜியோ ஓஎஸ் வாயிலாக இயக்கப்படுகிறது. ஜியோ லேப்டாப் 2gp எல்பிடிடி ஆர்4 எக்ஸ் ரேம் கொண்டு உள்ளது. ரேம் 32gp eMMC ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

ஜியோ லேப்டாப்பில் 11.6 இன்ச் ஹெச்டி எல்இடி பேக்லிட் ஆன்டிக்ளேர் டிஸ்ப்ளே இருக்கிறது. அதோடு 1366×768 பிக்சல்கள் ரிசல்யூஷனை கொண்டு உள்ளது. சாதனத்திலுள்ள போர்ட்களில் யூஎஸ்பி 2.0 போர்ட், யூஎஸ்பி 3.0 போர்ட் மற்றும் ஹெச்டிஎம்ஐ போர்ட் போன்றவை அடங்கும். இவற்றில் யூஎஸ்பி டைப்-சி போர்ட்கள் எதுவுமில்லை. மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் இருக்கிறது. இந்த லேப்டாப்-ல் வயர்லெஸ் இணைப்பு வைபை 802.11ac ஆல் ஆதரிக்கப்படுகிறது.

இதிலுள்ள புளூ டூத் இணைப்பு 5.2 உடன் வருகிறது மற்றும் 4ஜி மொபைல் பிராட்பேண்ட் இணைப்பையும் ஆதரிக்கிறது. ஜியோ லேப்டாப்பில் இரட்டை உள்ஸ்பீக்கர்கள் மற்றும் இரட்டை மைக்ரோ போன்கள் இருக்கிறது. இவற்றில் கைரேகை ஸ்கேனர் இல்லை. பேட்டரியைப் பொறுத்தவரையிலும் ஜியோ லேப்டாப் 55.1-60Ah பேட்டரி திறன்கொண்டது. சாதனத்தின் எடை 1.2 கிலோ மற்றும் 1 ஆண்டு பிராண்ட் உத்தரவாதத்துடன் வருகிறது.