இன்று காலை 8 மணி அளவில் புதுப்பிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் இந்தியாவின் கோவிட்-19 பாதிப்பு எண்ணிக்கையானது 4.48 கோடியாக (4,48,91,989) இருக்கிறது. தினசரி கொரோனா பாதிப்பு 7.03% ஆக இருக்கிறது. தினமும் கொரோனா பாதிப்பு 7.03 சதவீதமாகவும், வாராந்திர விகிதம் 5.43 சதவீதமாகவும் பதிவாகி உள்ளது. இப்போது மொத்த நோய் தொற்றுகளில் 0.15% ஆகும். தேசிய கோவிட்-19 மீட்பு விகிதமானது 98.66% ஆக பதிவுசெய்யப்பட்டு இருப்பதாக சுகாதார அமைச்சக இணையதளம் தெரிவித்து உள்ளது.

RT-PCR மற்றும் ஆன்டிஜென் சோதனைகளின் பரிந்துரைக்கப்பட்ட பங்கை பராமரிக்கும் அதே நேரத்தில், அனைத்து மாவட்டங்களிலும் போதுமான அளவிலான சோதனைகளை பராமரிப்பதில் கவனம் செலுத்தும்படி மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. அதோடு INSACOG ஆய்வகங்களின் நெட்வொர்க் வாயிலாக முழு மரபணு வரிசைப்படுத்தலுக்கு அனுப்பப்பட்ட கோவிட்-பாசிட்டிவ் மாதிரிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும்படி அரசு கேட்டுக்கொண்டுள்ளது.