இந்தியாவில் 12 கோடிக்கும் அதிகமான விவசாயிகள் பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் பயன் பெறுகிறார்கள். இந்த திட்டத்தின் கீழ் வருடத்திற்கு 6,000 ரூபாய் வழங்கப்படும். இந்த பணம் மொத்தமாக வழங்கப்படாமல் தாவணை முறையில் 2000 ரூபாயாக வழங்கப்படும். இதுவரை விவசாயிகளுக்கு 13 தவணை தொகைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் தற்போது 14-வது தவணை தொகை பணம் எப்போது வரும் என்ற தகவல் வெளிவந்துள்ளது.

அதன்படி மே மாதம் 15-ம் தேதி 14-வது தவணை தொகைக்கான பணத்தை மத்திய அரசு விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகவில்லை. மேலும் பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் இணைந்து பயன்பெற விரும்பும் விவசாயிகள் PM Kisan வெப்சைட்டில் தேவையான விவரங்களை உள்ளீடு செய்து பதிவு செய்து கொள்ளலாம்.