சென்னை மாவட்டத்தில் உள்ள அசோக் நகரில் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் மூடநம்பிக்கைகளை விதைக்கும் வகையில் ஒரு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அப்போது மகாவிஷ்ணு என்பவர் பேசிய வீடியோக்கள் சமூக வலைதளத்தில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது. அதில் இருந்து பலரும் யார் இந்த மகாவிஷ்ணு என கேள்வி எழுப்ப ஆரம்பித்தனர்.  பள்ளி பருவத்தில் இருந்தே மகாவிஷ்ணு மேடைப் பேச்சாளராக இருந்துள்ளார்.

இதனை அடுத்து ஒரு தனியார் தொலைக்காட்சியில் ஸ்டாண்ட் அப் காமெடியனாக வலம் வந்துள்ளார். அவரை பெரும்பாலானோர் மதுரை மகா என அழைத்தனர். இதனை அடுத்து மகாவிஷ்ணு நான் செய்த குறும்பு என்ற படத்தை எடுக்க வேண்டாம். அந்த சமயம் அவரது தந்தை கிருஷ்ணமூர்த்தி ஒரு விபத்தில் இறந்து விட்டார். இதனால் என்ன செய்வது என்று அறியாமல் ஆன்மீக சொற்பொழிவை கையில் எடுத்து அதில் பயணிக்க ஆரம்பிக்கிறார்.

இதனைத் தொடர்ந்து யூடியூபர் மதுரை மகா என்ற அடையாளத்தை மகாவிஷ்ணு என மாற்றி கொண்டார். மகாவிஷ்ணு பரம்பொருள் அறக்கட்டளை என்ற யூடியூப் சேனலை தொடங்கி அதில் கிடைத்த வருமானத்தை வைத்து அன்னதானம் வழங்குவதாக கூறி நன்கொடையும் வங்கி உள்ளார். திருப்பூரில் உள்ள அவிநாசியில் 2021-ஆம் ஆண்டு தனது அறக்கட்டளையின் அலுவலகத்தை அமைத்து தினமும் அன்னதானம் கொடுக்க ஆரம்பித்தார்.

அது மட்டும் இல்லாமல் யோகா, ஆன்மீக சொற்பொழிவு என முழு நேரமாக அதிலேயே இறங்கிவிட்டார். தனது வகுப்பில் ஒருவர் கலந்து கொள்ள வேண்டும் என்றால் மகாவிஷ்ணு பத்தாயிரம் ரூபாய் வரை வசூல் செய்கிறார். இப்படி அவருக்கு வெளிநாடு வாழ் இந்தியர்களிடமிருந்தும் அதிகளவு நன்கொடை கிடைத்துள்ளது. இந்த அறக்கட்டளைக்கு தமிழ்நாட்டில் மட்டுமில்லாமல் சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, ஆஸ்திரேலியா நாடுகளிலும் கிளை அலுவலகங்கள் இருக்கிறது. பள்ளிகளில் பேசி சர்ச்சையை ஏற்படுத்திய மகாவிஷ்ணு தற்போது ஆஸ்திரேலியாவில் இருக்கிறார் என அவரது அறக்கட்டளை சார்பில் கூறப்பட்டுள்ளது.