தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக இருப்பவர் லிங்குசாமி. ஆனந்தம் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான லிங்குசாமி இரண்டாவது படமான ரன் படத்தின் மூலம் மிகப் பெரிய வெற்றியை கொடுத்தார். கடந்த 2005-ம் ஆண்டு லிங்குசாமி இயக்கத்தில் ஜி திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் நடிகர் அஜித், திரிஷா, விவேக் போன்ற பல நட்சத்திரங்கள் நடித்திருந்தார்கள். ஆனால் ஜி திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. இந்நிலையில் சமீபத்திய பேட்டியில் ஜி படத்தின் தோல்வி குறித்து லிங்குசாமி பேசியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது, ஜி படத்தின் தோல்விக்கு நடிகர் அஜித் தான் காரணம். நான் ஜி படத்தின் கதையை மாதவனுக்காக தான் தயார் செய்தேன். அப்போது திடீரென நடிகர் அஜித்தை சந்திக்க வேண்டிய நிலை வந்தது. நான் அவரிடம் ஜி படத்தின் கதையை சொன்னபோது நான் அந்த படத்தில் நடிக்கிறேன் என்று கூறினார். அவராகத்தான் ஜி படத்தில் நான் நடிக்கிறேன் என்று சொன்னார். அஜித் பெரிய ஹீரோ என்பதால் நானும் ஒப்புக்கொண்டேன். அஜித் அந்த படத்தில் கல்லூரி மாணவராக நடித்ததால் ஒல்லியாக இருக்க வேண்டும் என்றேன்.

ஆனால் கடைசி நேரத்தில் அஜித்தால் எடையை குறைக்க முடியாமல் போனது. சில காட்சிகளில் நடிகர் அஜித் குண்டாகவும் ஒல்லியாகவும் தெரிவார். அதன் பிறகு படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் தாடி வளர்க்க வேண்டும் என்றேன். அதற்கும் நடிகர் அஜித் மறுத்துவிட்டார். ஒருவேளை மாதவன் மட்டும் அந்த படத்தில் நடித்திருந்தால் கதை வேறு மாறியாக அமைந்திருக்கும். ஜி படத்தின் தோல்விக்கு அஜித் தான் காரணம் என்று கூறியுள்ளார். மேலும் இயக்குனர் லிங்குசாமி ஜி படத்தின் தோல்விக்கு அஜித் தான் காரணம் என வெளிப்படையாக சொன்னது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.