
ஷிகர் தவான் மற்றும் சோஃபி ஷைன் இடையிலான புதிய உறவு குறித்த வதந்திகள் தற்போது கிரிக்கெட் உலகில் பெரும் விவாதத்திற்குக் காரணமாகின்றன. ஐர்லாந்தைச் சேர்ந்த தயாரிப்பு ஆலோசகர் சோஃபி, இன்ஸ்டாகிராமில் தவானுடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து “My Love” என பதிவு செய்ததும், இவ்வதந்திக்கு அடிப்படை உறுதியை ஏற்படுத்தியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, ரசிகர்கள் மட்டுமின்றி பல கிரிக்கெட் ஊடகங்களும் இந்த வதந்தியை உண்மை என நினைத்துவிட்டனர். 2025 சாம்பியன்ஸ் டிராபி போட்டியின் போது, இந்திய அணியின் போட்டிகளை நேரில் காண வந்திருந்த சோஃபியின் அருகே தவான் அமர்ந்திருப்பது பல கேமரா காட்சிகளில் பதிவாகி இருந்தது.
இவரது முந்தைய வாழ்க்கை குறித்து பேசும்போது, 2023ல் தனது மனைவி ஆயிஷா முகர்ஜியுடன் விவாகரத்து பெற்ற தவான், சமீபத்தில் தான் இரண்டு ஆண்டுகளாக தனது மகனை பார்க்க முடியவில்லை என உருக்கமாக பகிர்ந்திருந்தார். இந்நிலையில், அவர் புதிய வாழ்கையைத் தொடங்கியுள்ளரா? என ரசிகர்கள் ஆர்வத்துடன் கவனித்து வருகின்றனர்.
ஐபிஎல் வரலாற்றில் 6769 ரன்களுடன் அதிக ரன்கள் எடுத்த மூன்றாவது வீரராகத் திகழும் தவான், 2024 ஆம் ஆண்டு பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக கடைசி முறை விளையாடினார். காயத்தால் சில போட்டிகளை தவிர்த்ததையடுத்து, தலைமை பொறுப்பை சாம் கரனிடம் ஒப்படைத்தார்.
தற்போது கிரிக்கெட்டிலிருந்து ஓய்வெடுத்து தனி வாழ்க்கையை முன்னேற்றிக்கொண்டு வரும் தவானின் புதிய காதல் பயணம், அவரது ரசிகர்களிடையே நம்பிக்கை மற்றும் பரவசத்துடன் வரவேற்கப்படுகிறது.