மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஜபல்பூரில் ஒரு தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் இளம்பெண் ஒருவர் ph.d படித்து வருகிறார். இவர் கடந்த 2022-ல் சமூக ஊடகம் வழியாக உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள சுல்தான் பூரை சேர்ந்த அபிநவ் என்ற நபருடன் பழகியுள்ளார். இந்தப் பழக்கம் இருவருக்கும் இடையே காதலாக மாறியுள்ளது. அதன் பின்னர் அந்த இளம் பெண் அடிக்கடி லக்னோவில் உள்ள அபிநவீன் வீட்டிற்கு செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே பாலில் உறவு ஏற்பட்டு அந்த இளம் பெண் கர்ப்பம் அடைந்துள்ளார்.

அபிநவ் அந்த இளம் பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஜூஸில் கருத்தடை மாத்திரைகளை கலந்து குடிக்க வைத்துள்ளார். இதனை அடுத்து மீண்டும் அந்த இளம் பெண்ணை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பல உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்துச் சென்றுள்ளார். இதனால் கடந்த நவம்பர் 2023 இல் அந்த இளம் பெண் மீண்டும் கர்ப்பமாகியுள்ளார். உடனே தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அந்த இளம் பெண் அபிநவை வற்புறுத்தியதால், அவரை தனியே சந்திக்க வேண்டும் என கூறி அபினவ் தனியே அழைத்து சென்று மீண்டும் ஜூஸில் கருத்தடை மாத்திரைகளை கலந்து குடிக்க வைத்துள்ளார்.

இதனை அடுத்து அந்த இளம் பெண் அபிநவை திருமணம் செய்து கொள்ளுமாறு தொடர்ந்து கேட்டுள்ளதால் தனக்கு ரூபாய் 50 லட்சம் வரை வரதட்சணை வேண்டும் என கேட்டு தகாத முறையில் அபிநவ் பேசி உள்ளார். அதன் பின்னர் அந்தப் பெண்ணுடன் உள்ள தொடர்பை முழுமையாக துண்டித்துள்ளார். இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த பெண் ஜபல்பூர் கமாரியா காவல் நிலையத்தில் அபிநவ் மீது புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் அனைத்தும் லக்னோவில் நடந்ததால் இந்த வழக்கு உத்திர பிரதேச மாநில காவல்துறைக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் குற்றம் சாட்டப்பட்ட  அபிநவை  காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.