
ராசிபுரம் பகுதியில் நடைபெற்ற சம்பவம் அனைவரையும் உணர்ச்சிவசப்படுத்தியுள்ளது. 78 வயதான ராசம்மாள் என்ற மூதாட்டி, தனது வீட்டு அருகே இருந்த 80 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்து 6 மணி நேரம் தவித்த பின்னர் தீயணைப்புத்துறையினரால் உயிருடன் மீட்கப்பட்டார்.
பார்வை குறைபாடு காரணமாக கிணற்றில் தவறி விழுந்த ராசம்மாள், நீண்ட நேரம் ‘காப்பாத்துங்க காப்பாத்துங்க’ என சத்தமிட்டுள்ளார். அவரது குரலைக் கேட்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர், தொடர்ந்து 6 மணி நேரம் நடத்திய மீட்புப் பணியின் முடிவில் ராசம்மாளை உயிருடன் மீட்டனர்.
மீட்கப்பட்ட ராசம்மாள் உடனடியாக அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார்.