
லோகேஷ் கனகராஜ் டைரக்டில் தளபதி விஜய் இப்போது லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்படிப்பு காஷ்மீரில் இப்போது மும்முரமாக நடந்து வருகிறது. அங்கு நடிப்பதற்காக சென்ற மிஷ்கின், கௌதம் மேனன் உள்ளிட்டவர்கள் தங்களது பகுதியை முடித்துவிட்டு ஏற்கனவே சென்னைக்கு திரும்பி விட்டனர். இதனிடையே காஷ்மீரில் கடும் குளிரில் 500 படக்குழுவினர் உடன் லோகேஷ் படப்பிடிப்பை மும்முரமாக செய்து வருகிறார்.
இந்த நிலையில் தளபதி விஜய்க்கு வில்லனாக நடிக்க உள்ள சஞ்சய் தத் லியோ சூட்டிங்கில் பங்கேற்க மும்பையிலிருந்து கிளம்பி இருக்கிறார். அவர் கருப்புநிற உடையில் மும்பை ஏர்போர்ட்டுக்கு வந்திருக்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
