
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் தனுஷ். இவருடைய 52வது படம் இட்லி கடை. இந்த படத்தை தனுஷ் அவரே இயக்கி நடிக்க இருக்கும் நிலையில் சற்று முன் அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் நடிகர் தனுஷ் பிரபல நடிகர் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொண்ட நிலையில் யாத்ரா மற்றும் லிங்கா என்ற இரு மகன்கள் இருக்கிறார்கள். இவர்கள் இருவரும் கிட்டத்தட்ட 18 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்த நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு விவாகரத்து செய்து பிரிவதாக அறிவித்தனர்.
இந்நிலையில் நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா மீண்டும் இணைய போவதாக தகவல் வெளிவந்துள்ளது. அதாவது தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் மகன்கள் உடன் ஐஸ்வர்யா இருக்கும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார். இந்த போட்டோவுக்கு நடிகர் தனுஷ் லைக் செய்து இருந்தார். இதன் மூலம் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இடையே இருந்த மனக்கசப்பு நீங்கியதாக கூறப்படுகிறது. மேலும் இதனால் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா விரைவில் இணைவார்கள் என்று கூறப்படுகிறது.