லியோ படத்தினுடைய 4 மணி ரசிகர்கள் காட்சிக்கு அனுமதி அளிக்க கோரி பட தயாரிப்பு நிறுவனமானது மனுதாக்கல் செய்திருந்தது. மேலும் 9  மணிக்கு காட்சிக்கு பதிலாக,  7 மணி காட்சிக்கு அனுமதி  அளிக்க வேண்டும் எனவும் நீதிமன்றத்தில் மனுவானது தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு இன்றைய தினம் நீதிபதி அனிதா சுமந்த்  முன்பு விசாரணைக்கு வந்தபோது,  4 மணி காட்சிக்கும்,  7 மணி காட்சிக்கும் அனுமதி அளிக்க முடியாது.

காலை  9 மணி காட்சிக்கு தான் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதிகாலை 4 மணி காட்சிக்கு ஒரு படத்திற்கு ரசிகர் சென்றபோது அவர் உயிரிழந்துவிட்டார். சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படுவதற்கான வாய்ப்புகள்  இருக்கின்றன அதனையும் அரசுதான் கையாள வேண்டும்.  எனவே 9 மணி காட்சிக்கு பதிலாக 7 மணி காட்சிக்கும், 4  மணி காட்சிக்கும் அனுமதி அளிக்க முடியாது என அரசு தரப்பில் வாதிடப்பட்டது. பட நேரம் என்பது 2 மணி நேரம் 45 நிமிடங்கள் இருக்கிறது.

அது எங்களுக்கு தெரிந்திருந்தால் நாங்கள் 5 கட்சிகளுக்கு அனுமதி அளித்திருக்க மாட்டோம். வேண்டுமென்றால் இடைவெளி நேரத்தை குறைத்துக் கொண்டு 5  காட்சிகளையும் காலை 9 மணி முதல் இரவு 1:30 மணிக்குள்அனைத்து  காட்சிகளையும் திரையிடுவதற்கு அனுமதி அளிக்க முடியுமா ? என்பதை பார்க்கிறோம் என்று அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

படம் தயாரிப்பு நிறுவனத்தை பொறுத்தவரைக்கும்,  அவ்வாறு இடைவெளி நேரத்தை குறைத்துக் கொண்டு படத்தை திரையிடுவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று தெரிவித்து இருக்கிறபொழுது,  அதற்கு அரசு தரப்பை பொறுத்தவரைக்கும்,  இடைவெளியை குறைத்துக் கொள்கிறோம் என படம் தயாரிப்பு நிறுவனம் சொல்ல முடியாது. அதனை தியேட்டரு உரிமையாளர் தான் கூற முடியும்.

ஏனென்றால் அவருக்கென்று காலம், நேரம் இருக்கின்றது. அவர்கள் விளம்பரம் எல்லாம் வைத்திருப்பார்கள். அதையெல்லாம் அவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே இதனை பட தயாரிப்பு நிறுவனம் தன்னிச்சையாக கூற முடியாது என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பட தயாரிப்பு நிறுவனத்தை பொறுத்தவரைக்கும் 5 காட்சிகளுக்கு அனுமதி அளித்திருக்கிறார்கள். ஆனால் இந்த நேர காலத்திற்குள் ஐந்து காட்சிகளை திரையிட முடியாது.

எனவே 7 மணிக்கு தொடங்குவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று பட தயாரிப்பு நிறுவனம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது. நீதிபதியும் அதற்கு அரசுக்கு தனது கருத்தை  தெரிவித்தார். ஏனென்றால் ஐந்து காட்சிகளுக்கு அனுமதி அளித்திருக்கிறீர்கள்.  அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்து தான்  ஐந்து காட்சிகளுக்கு  அனுமதி அளித்தோம் என கூறிவிட்டு,  தற்பொழுது படத்தினுடைய நேரம் தங்களுக்கு தெரியவில்லை என கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. 850 திரையரங்கில் படத்தை வெளியிடுவதாக பட தயாரிப்பு நிறுவனம் கூறிய போது,

இவ்வாறு 850 திரையரங்குகளில் திரையிடுவதாக கூறும்போது அனைத்து அம்சங்களையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். போலீஸ்சாரும்  பாதுகாப்பு பணிகளை எல்லாம் செல்ல வேண்டும்.எனவே இதுகுறித்தும் கருத்தில் கொள்ள வேண்டும் என தெரிவித்தார். இதனை தொடர்ந்து 4 மணி காட்சிகளுக்கு அனுமதி அளிக்க உத்தரவிட முடியாது எனக் கூறிய நீதிபதி,  நான்கு மணி காட்சிக்கு அனுமதி வேண்டும் என்றால் ? அது தொடர்பான அரசு ஆணை தான் நீங்கள் எதிர்த்து மனு தாக்கல் செய்ய முடியும். வேண்டும் என்றால் 9 மணிக்கு பதிலாக 7 மணிக்கு காட்சிகள் தொடங்குவது குறித்து அனுமதிக்க வேண்டுமென அரசிடம் மீண்டும் மனுவை அளியுங்கள். அதனைபரிசீலித்து  அரசு முடிவு எடுக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டிருக்கிறார்.