லியோ படத்தை அதிகாலை நாலு மணிக்கு திரையிட அனுமதி கேட்டு உயர்நீதிமன்றத்தில் தயாரிப்பு நிறுவனம் வழக்கு தொடர்ந்து உள்ளது.

தமிழக அரசிடம் லியோ பட தயாரிப்பு நிறுவனம் சார்பில் படம் வெளியாக கூடிய 19ஆம் தேதி அதிகாலை 4 மணி காட்சி,  7 மணி காட்சிகள் பிறகு மற்ற காட்சிகளுக்கும் அனுமதி கேட்கப்பட்டது. அது மட்டுமல்லாமல் அடுத்த 4 நாட்களுக்கு ஐந்து காட்சிகள் வெளியிட வேண்டும் என்று அனுமதி கேட்கப்பட்டது. ஆனால் தமிழக அரசு எடுத்த முடிவுப்படி,  படம் வெளியாக கூடிய முதல் நாளில் நான்கு மணி காட்சி அனுமதிக்க முடியாது. முதல் காட்சியாக 9.00 மணிக்கு தான் திரையிட வேண்டும் என்றும் தமிழக அரசு அறிவுறுத்தது.

இதை எதிர்த்தும்,  தமிழக அரசின் முடிவை ரத்து செய்தும் தங்களுக்கு முதல் நாள் ஐந்து காட்சிகள் திரையிட அனுமதிக்க வேண்டுமென்று லியோ படம் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் வழக்கு தொடரப்பட்டிருக்கிறது.இந்த வழக்கு தொடர்பாக மனு தாக்கல் செய்திருப்பதாகவும், இதை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் நீதிபதி அனிதா சுமந்த் முன்பாக முறையீடு செய்யப்பட்டது.

இந்த  முறையிட்ட ஏற்றுக்கொண்ட நீதிபதி இன்று ஒரு மணியளவில் வழக்கை  விசாரிப்பதாக தெரிவித்திருக்கிறார். அப்போது தமிழக அரசு தரப்பில் அளிக்கப்படும் பட்சத்தில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வாய்ப்பு இருக்கிறது. அல்லது குறுகிய கால அவகாசமாக  நாளை காலை தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என்றும் உத்தரவு விட வாய்ப்பு இருக்கிறது. எனவே இன்னும் இரண்டு நாட்கள் இருக்கக்கூடிய நிலையில் இரண்டு நாட்களுக்குள் நீதிமன்ற உத்தரவு பெற்று,  5 காட்சிகளை திரையிட வேண்டும் என்ற முனைப்புடன் லியோ பட தயாரிப்பு குழு வழக்கு பணிகளில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.