
விநியோகஸ்தருடன் ஏற்பட்ட பிரச்சனையால் லியோ படத்தை ஏஜிஎஸ் திரையரங்கில் வெளியிட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக அர்ச்சனா கல்பாத்தி தெரிவித்துள்ளார்.
லியோ திரைப்படத்தை வெளியிடுவதில் தொடர்ந்து பல சிக்கல்கள் நீடித்துவரக்கூடிய நிலையில் தற்போது திரையரங்க உரிமையாளர்களுக்கும் – திரைப்படத்தின் விநியோகஸ்தர்களுக்கும் இடையே ஏற்பட்டுள்ள பிரச்சனையும் லியோ திரைப்பட தயாரிப்பாளரும், ரசிகர்களுக்கும் மிகப்பெரிய தலைவலியாக அமைந்துள்ளது.
இந்த பிரச்சனையை பொறுத்தவரையில் திரையரங்குகளில் லியோ திரைப்படத்தை திரையிடுவதற்கு விநியோகஸ்தகர்கள் அதிகமான பங்கு தொகை கேட்பதால் திரையரங்கங்கள் நஷ்டத்திற்கு படத்தை திரையிட முடியாது என்பதால் அதனை கொடுக்க மறுக்கின்றனர்.இதன் காரணமாக தொடர்ந்து பேச்சுவார்த்தையில் நீடித்து வந்தது.
ஒரு திரைப்படம் வெளியாகும் போது இது போன்ற பேச்சு வார்த்தை நடைபெறுவது வழக்கம் தான். ஆனால் வெளிப்படையாக ”எங்களுக்கு பிரச்சனை” ( தயாரிப்பாளருக்கும் – தியேட்டர் உரிமையாளருக்கும்) இருக்கிறது. இதன் காரணமாக திரைப்படத்தை எங்களது திரையரங்கில் வெளியிட முடியுமா ? என்பது தெரியவில்லை என்று ஒரு திரையரங்க உரிமையாளர் தெரிவித்ததில்லை.
இந்நிலையில் ஏஜிஎஸ் திரையரங்க உரிமையாளர்களில் ஒருவரான அர்ச்சனா கல்பாத்தி ட்விட்டர் X பக்கத்தில் இது தொடர்பாக வெளிப்படையாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பதிவிட்டுள்ள ட்விட்டரில், விநியோகஸ்தருடன் இன்னும் ஒப்பந்தம் கையெழுதக்காமல் இருப்பதால் லியோ படத்திற்கான முன்பதிவுகளைத் தொடங்க முடியவில்லை. சிரமத்திற்கு வருந்துகிறோம் என பதிவிட்டுள்ளார்.
We have not been able to open #Leo bookings because of terms issue with the distributor. We regret the inconvenience caused to all our regular patrons and thank you for waiting patiently. Will update if there are any developments by 6:00 pm today @agscinemas
— Archana Kalpathi (@archanakalpathi) October 17, 2023