
இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் யாஹ்யா சின்வார் இவர் தற்போது காசாவில் நடந்த தாக்குதலில் கொல்லப்பட்டார். இதற்கு முன்பாக சின்வார்க்கு முன் தலைவராக இருந்தவர் இஸ்மாயில் ஹனியே இவர் ஈரானில் இஸ்ரேலியா ராணுவத்தால் கொல்லப்பட்டார். இந்நிலையில் தொடர்ந்து ஹமாஸ் அமைப்பின் தலைவர்கள் கொல்லப்படுவதால் தங்களின் தாக்குதலை நிறுத்த முடியாது என ஹமாஸ் அமைப்பின தெரிவித்தனர்.
இதனை அடுத்து ஹமாஸ் அமைப்பின் அடுத்த தலைவராக பொறுப்பேற்கப் போவது யாராக இருக்கும் என அனைவரும் கவனித்துக் கொண்டு வருகின்றனர். தலைவர் பொறுப்பை ஏற்பதற்கு அடுத்த நிலையில் சின்வாரின் சகோதரரான முகமது சின்வார் பெயர் முதலில் அடிபடுகிறது. இவர் ஆயுதப்படைப்பிரிவில் மூத்த கமெண்ட்ராக இருந்து வருகிறார். இவரை அடுத்து சின்வாரின் மிக முக்கிய உதவியாளராக இருந்த ஹமாசின் துணைத் தலைவர் கலில் அல் ஹய்யா தலைவர் பட்டியலில் உள்ளார். இவர் ஏற்கனவே இஸ்ரேலுடன் அமைதி பேச்சு வார்த்தையில் ஹமாஸ் அமைப்பின் சார்பாக ஈடுபட்டவர்.
ஆனால், இவர் வெளி உலகத்திற்கு அதிகம் தெரிந்தவர், வெளிநாட்டில் இருப்பதால் இப்பொறுப்பை கையில் எடுப்பாரா என்பது தெரியவில்லை. இவர்களை அடுத்து 2004 முதல் 2017 வரை ஹமாஸ் அமைப்பின் தலைவராக இருந்த காலெத் மஸில் இவர் தற்பொழுது கத்தாரில் உள்ளார். இவரின் பெயரும் தலைவர் பட்டியலில் அடிப்பட்டு வருகிறது. ஹிஸ்மான் பாத்ரான் உயர் மட்டத் தலைவர் இவரின் பெயரும் பட்டியலில் உள்ளது. தற்போது தலைவராக யாரை தேர்ந்தெடுப்பது என்பதில் ஹமாஸ் அமைப்பு தீவிரமாக உள்ளது. இந்நிலையில் இஸ்ரேல் பிணைக் கைதிகளை போர் முடியும் வரை விடமாட்டோம் என ஹமாசின் துணைத் தலைவர் கலில் அல் ஹய்யா தெரிவித்துள்ளார்.