கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அரசு சட்டக் கல்லூரியில் ராஜா என்பவர் எல்.எல்.பி இறுதி ஆண்டு பயின்று வருகிறார். இவர் நண்பர்களுடன் அறை எடுத்து வடவள்ளியில் தங்கியுள்ளார். இந்நிலையில் குடும்ப சூழ்நிலை காரணமாக ராஜா பகுதி நேரமாக தனியார் நிறுவனத்துடன் இணைந்து வாடகை மோட்டார் சைக்கிள் இயக்கி வந்துள்ளார். இந்நிலையில் வாடிக்கையாளர் ஒருவரை ஏற்றி செல்வதற்காக ராஜா மோட்டார் சைக்கிளுடன் ரயில் நிலையத்திற்கு சென்றுள்ளார்.

அப்போது சில ஆட்டோ ஓட்டுநர்கள் வாடகை மோட்டார் சைக்கிள் ஓட்ட அனுமதி இல்லை என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அவர்கள் ராஜாவை தாக்கியதாக தெரிகிறது. இதனால் காயமடைந்த ராஜா கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனை அறிந்த சட்டக் கல்லூரி மாணவர்கள் ஆட்டோ ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணனிடம் மனு அளித்துள்ளனர்.