கர்நாடகா மாநிலம் மைசூர் மாவட்டத்தை சேர்ந்த தம்பதி சிவலிங்கு – பாரதி. சிவலிங்குவின் தம்பி ஹனுமந்து. இந்த இரண்டு சகோதரர்கள் இடையே பல காலமாக நிலப்பிரச்சனை இருந்து வந்துள்ளது. இருவருக்கு சொந்தமான நிலத்தில் 16 ஆயிரம் ஸ்கொயர் ஃபீட் இடத்திற்காக இருவரும் சண்டையிட்டு வந்தனர். அவ்வப்போது ஊர் மக்கள் இருவரையும் சமாதானம் செய்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை இருவரும் நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதில் ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த ஹனுமந்து ஆத்திரமடைந்து மண்வெட்டியால் அண்ணன் சிவலிங்குவை தாக்கியுள்ளார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் அவரை காப்பாற்ற வந்த மனைவி பாரதியையும் மண்வெட்டியால் தாக்க அவரும் உயிரிழந்துள்ளார். பின்னர் ஹனுமந்து காவல் நிலையத்தில் சென்று குற்றத்தை ஒப்புக்கொண்டு சரணடைந்துள்ளார். இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நிலப்பிரச்சனையில் அண்ணன் அண்ணியை தம்பி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.