கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் விஸ்வரூப ஆஞ்சநேயர் சாமி சிலை இருக்கிறது. இந்நிலையில் ஜெயந்தி விழாவை முன்னிட்டு வருகிற 10-ஆம் தேதி ஆஞ்சநேயர் சுவாமிக்கு 16 வகையான பொருட்களால் அபிஷேகம் நடத்தப்பட்டு பக்தர்களுக்கு லட்டு, பஞ்சாமிர்தம், விபூதி, குங்குமம், சந்தனம் ஆகியவை பிரசாதமாக கொடுக்கப்படும்.

எனவே பக்தர்களுக்கு கொடுப்பதற்காக ஒரு லட்சம் லட்டு தயாரிக்கும் பணி கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தொடங்கியது. இதற்காக அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் லட்டு தயாரிக்கும் பணியை தொடங்கி வைத்தார். லட்டு தயாரிக்கும் பணியில் சுமார் 50- க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.