சத்தீஸ்கர் மாநிலம் கோர்பா மாவட்டத்தில் உள்ள பைகாமர் கிராமத்தில் நடந்த அதிர்ச்சிகரமான சம்பவம் சமூகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 22 வயதான திகேஸ்வர் ரதியாவை அவரது வீட்டில் படுக்கையில் நுழைந்த விஷப் பாம்பு கடித்தது. உடனே மாவட்ட அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவரை மீட்க மருத்துவர்கள் போராடிய போதிலும், சிகிச்சை பலனின்றி ரதியா உயிரிழந்தார்.

இந்த நிகழ்வின் பின்னர், கிராம மக்கள் தீவிர தேடல் நடத்தி, ரதியாவை கடித்த விஷப்பாம்பை பிடித்து, ஒரு கூடையில் பூட்டி வைத்தனர். இறுதிச் சடங்கின்போது, கிராமத்து மக்கள் அந்த பாம்பை சிதையில் உயிருடன் எரித்தனர். அவர்கள் இதற்கு காரணமாக, பாம்பு உயிரோடு இருந்தால் மற்றவர்களையும் தாக்கி விடும் என்ற அச்சத்தை தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறை சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தியுள்ளது. கிராம மக்கள் கடையநிலை மரபுகளை தொடர்ந்து செயல்பட்டதை போலீசார் கவனத்தில் எடுத்துள்ளனர்.