Khelo India Youth Games (KIYG) 2023 ஜனவரி 30-ஆம் தேதி தொடங்கி மத்தியப் பிரதேசத்தில் நடைபெற்று கொண்டிருக்கிறது. கேலோ இந்தியா யூத் கேம்ஸ் 2023-ல் பதக்கப் பட்டியலில் மகாராஷ்டிரா 28 தங்கம் , 30 வெள்ளி மற்றும் 25 வெண்கலப் பதக்கங்களுடன் முதலிடத்திலும், ஹரியானா 23 தங்கம், 18 வெள்ளி மற்றும் 15 வெண்கலத்துடன் 2-வது இடத்திலும் உள்ளது.

மத்தியப் பிரதேசம் மற்றும் புது டெல்லியில் உள்ள எட்டு நகரங்களில் மொத்தம் 11 அரங்குகள் வெவ்வேறு KIYG 2023 நிகழ்வுகளை நடத்தும். இந்தியாவின் 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் 5,000 க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள், 2023 கேலோ இந்தியா யூத் கேம்ஸ் 27 விளையாட்டுகளில் 1,936 பதக்கங்களுக்காக போட்டியிடுகின்றனர். அதில் 573 தங்கம், 580 வெள்ளி மற்றும் 783 வெண்கலம் ஆகும்.