
சென்னை மாவட்டத்தில் பிராமணர்கள் தனிப்பட்ட பாதுகாப்பு அளிக்க கோரி நடத்திய போராட்டத்தில் நடிகை கஸ்தூரி கலந்து கொண்டு தெலுங்கு மொழி பேசும் மக்களை அவதூறாக பேசிய வழக்கில் தற்போது சிக்கி உள்ளார். இந்த நிலையில் நடிகை கஸ்தூரி முன்ஜாமின் கோரியும் அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து தலைமுறைவாகிய நடிகை கஸ்தூரியை காவல்துறையினர் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில் ஆந்திர மாநிலத்தில் ஹைதராபாத்தில் தயாரிப்பாளர் ஒருவர் வீட்டில் தங்கி இருந்த நடிகை கஸ்தூரியை கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.
இந்த நிலையில் நடிகை கஸ்தூரியை காவல்துறையினர் பாதுகாப்பில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் நடிகை கஸ்தூரிக்கு ஆதரவாக பேசியுள்ளார். இதில் அவர் கூறியதாவது,”நடிகை கஸ்தூரியை கைது செய்தது முழுக்க முழுக்க பழிவாங்கும் நடவடிக்கை ஆகும். நடிகை கஸ்தூரியை மட்டும் தனிப்படையை அமைத்து கைது செய்ததில் உள்நோக்கம் உள்ளது”. இவ்வாறு சீமான் கூறியுள்ளார்.