
தமிழ் சினிமாவில் மிகப் பிரபல நடிகராகவும் இயக்குனராகவும் வலம் வருபவர் ராகவா லாரன்ஸ். இவர் நடித்து இயக்கிய காஞ்சனா திரைப்படத்தின் 3 பாகங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து காஞ்சனா – 4 படத்தில் பூஜா ஹெக்டே நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் இவர் பேயாக நடிக்கலாம் என கூறப்படுகிறது. ஆனால் இத்தகவல் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை.