
திரைக்கதை ஆசிரியரும் இயக்குனருமான அகத்தியன் தற்போது வெளியாகி உள்ள மூன்று முடிச்சு சீரியலில் நடிக்க உள்ளார். இவர் இந்தி திரைப்படங்களையும் இயக்கியுள்ளார். இவர் திரைப்பட பாடல் ஆசிரியராகவும் உள்ளார். 1996 ஆம் ஆண்டு வெளியாகி உள்ள காதல் கோட்டை என்ற தமிழ் திரைப்படத்தை இயக்கி தேசிய விருதை பெற்றவர் ஆவார். இவர் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மூன்று முடிச்சு என்ற சீரியலில் நடிகராக நடிக்க உள்ளார் என்ற செய்தி வெளியாகியுள்ளது.
இந்த சீரியலை ரமணா, தென்னவன் படங்களை இயக்கிய இயக்குனர் நந்தன் சி முத்தையா இயக்கியுள்ளார். இந்த சீரியலில் பல்வேறு சீரியல் பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்த சீரியல் கிராமத்து பின்னணி கொண்ட கதைக்களமாக உள்ளது. தற்போது இந்த சீரியலில் இயக்குனர் அகத்தியன் நடிகராக நடிக்க உள்ளது இந்த சீரியல் மீது பெரும் எதிர்பார்ப்பை மக்களிடையே உருவாக்கியுள்ளது..