தமிழகத்தில் ஜனவரி 14-ஆம் தேதி போகி பண்டிகை வரும் நிலையில் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் போகிப் பண்டிகையை முன்னிட்டு பொருட்களை எரிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் போகி பண்டிகையின் போது பொது மக்களால் எதிர்க்கப்படும் பழைய பொருட்களை சென்னை மாநகராட்சி வாங்குவதற்கு தற்போது முடிவு செய்துள்ளது.

இந்த அறிவிப்பின்படி நாளை முதல் பொதுமக்கள் தூய்மை பணியாளர்களிடம் வீட்டில் உள்ள பழைய பொருட்களை கொடுக்கலாம் என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது. மேலும் பழைய பொருட்களை எரிப்பதன் மூலம் சுற்றுச்சூழல் மாசுபாடு ஏற்படும் என்பதற்காக தான் பழைய பொருட்களை எரிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது சென்னை மாநகராட்சி பழைய பொருட்களை வாங்குவதற்கு முன் வந்தது பலரது மத்தியிலும் பாராட்டை பெற்றுள்ளது.