திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை அருகே நடைபெற்ற ரயில் விபத்தினை தொடர்ந்து, தமிழ்நாடு அரசின் அமைச்சர் நாசர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு மேற்கொண்டார். மைசூர்-தர்பங்கா எக்ஸ்பிரஸ் ரயில், நின்று கொண்டிருந்த சரக்கு ரயிலுடன் நேருக்கு நேர் மோதிய விபத்தில், 3 பெட்டிகள் தீப்பற்றி எரிந்தன.  இதுவரை 19 பேர் காயம் அடைந்துள்ளதாக கூறபடுகிறது..  மீட்பு குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து தீயை கட்டுப்படுத்தினர் மற்றும் பயணிகளை பாதுகாப்பாக வெளியேற்றினர்.

அமைச்சர் நாசர், ரயில்வே அதிகாரிகளுடன் கலந்துரையாடி, மீட்பு பணிகளை மேம்படுத்தும் வகையில் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள உத்தரவிட்டார். இதுவரை எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், விபத்தில் படுகாயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பட்டுள்ளனர். பயணிகள் மற்றும் பொதுமக்களின் நலன்கள் பாதுகாக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் உறுதிப்படுத்தினார், மேலும் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.