சென்னையில் உள்ள சாந்தோமில் பேங்க் ஆப் இந்தியா வங்கி கிளை அமைந்துள்ளது. இந்த வங்கியில்  திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இது குறித்த தகவலின் பேரில் மயிலாப்பூர் மற்றும் அசோக் நகர் பகுதியில் இருந்து 4 தீயணைப்பு வாகனங்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர். மின் கசிவு காரணமாக வங்கியில் தீ விபத்து ஏற்பட்டது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த தீபத்தில் ஏற்பட்ட செய்தங்கள் குறித்து விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை. மேலும் இந்த சம்பவம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.