
ஹரியானா மாநிலத்தில் 1 ரூபாய் கூட வரதட்சணை பெறாமல் திருமணம் செய்த இளைஞர் ஒருவர் செய்த செயல் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
அதாவது ஹரியானாவை சேர்ந்த விகாஸ்ராணா என்ற இளைஞர், தனது திருமணத்தின்போது மணமகளின் பெற்றோர் வழங்கிய ரூபாய் 31 லட்சம் வரதட்சணையை திருமண மேடையிலேயே அவர்களிடம் திருப்பி கொடுத்து உள்ளார்.
மேலும், “மணப்பெண்ணே மிகப்பெரிய வரம், வேறு எதுவும் எனக்குத் தேவையில்லை” என்று கூறி 1 ரூபாய் நாணயம் மற்றும் ஒரு தேங்காய் மட்டும் மணமகளின் பெற்றோரிடம் பெற்றுக் கொண்டு முழு திருமணத்தையும் விகாஸ் எளிமையாக நடத்தியது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது.
இச்சம்பவம் சமூக வலைதளங்களில் வெளியாகி பலரது பாராட்டையும் பெற்று வருகிறது. மேலும் இன்றைய இளம் தலைமுறையினருக்கு விகாஸ் ராணா ஒரு சிறந்த உதாரணமாக திகழ்கிறார்.