
உத்திரபிரதேசம் முசாபர் நகரில் வேலையில்லாத இளைஞர் ஒருவர் வசித்து வருகிறார். இவர் ரூ.250 கோடி மதிப்புள்ள ஜிஎஸ்டி இ-வே பில்டிங் பரிவர்த்தனை தொடர்பாக சிக்கியுள்ளார். இதைப்பற்றி ஜிஎஸ்டி அதிகாரிகள் அவரது வீட்டிற்கு சென்று கூறும் போது தான் அந்த இளைஞருக்கு தெரிய வந்துள்ளது. அதாவது சில நாட்களுக்கு முன்பாக அஸ்வினி குமார் என்று இளைஞர் வேலை வாய்ப்பு தொடர்பாக வாட்ஸப்பில் செய்தி ஒன்று வந்துள்ளது.
தனக்கு வேலை கிடைக்க வேண்டும் என்று தனது வீட்டின் மின்கட்டணம், தந்தையின் ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களை மர்மநபருக்கு அனுப்பியுள்ளார். மேலும் 1750 ரூபாய் பணத்தையும் அனுப்பியுள்ளார்.
ஆனால் அவருக்கு அந்த வேலை கிடைக்கவில்லை. அதற்கு மாறாக அவர் கொடுத்த ஆவணங்களை வைத்து தவறான வங்கி கணக்கை உருவாக்கியுள்ளனர். அதை வைத்து ஒரு நிறுவனத்தை தொடங்கி சுமார் ரூ.250 கோடி இ-வே பில்லிங் மோசடி செய்துள்ளனர். இந்த வழக்கு குறித்து ஜிஎஸ்டி அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.