இந்தியாவில் மக்கள் பலரும் ஆண்ட்ராய்டு மொபைல் போன்களை பயன்படுத்தி டெலிகாம் நிறுவனங்கள் போட்டி போட்டு கொண்டு ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வருகின்றன.

அதன்படி ஜியோ ரீசார்ஜ் திட்டம் முன்னதாக 129 ரூபாய்க்கு தொடங்கப்பட்ட நிலையில் தற்போது 149 ரூபாயாக அதிகரித்துள்ளது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி 20 நாட்களாகும். ஒரு நாளைக்கு ஒரு ஜிபி டேட்டா வீதம் 20 நாட்களுக்கு 20ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடெட் காலிங் வசதி தினசரி 100 எஸ்எம்எஸ் ஆகியவை கிடைக்கும்.

ஏர்டெல் அடிப்படை ரீசார்ஜ் 155 ரூபாய்க்கு தற்போது வழங்கப்படுகிறது. மேலும் 55 ரூபாய் திட்டத்தின் மூலம் 24 நாட்களுக்கு தினமும் ஒரு ஜிபி டேட்டா, ஒரு நாளைக்கு 300 மெசேஜ் மற்றும் அன்லிமிடெட் காலிங் வசதியும் கிடைக்கும்.

வோடாபோன் ரீசார்ஜ் திட்டத்தில் 99 ரூபாய்க்கு பிளான் தொடங்கப்படுகிறது. இடத்தைப் பொறுத்து நான்கு நாட்களுக்கு அல்லது 15 நாட்களா என்று வேலிடிட்டி முடிவு செய்யப்படும். மேலும் இதில் 99 ரூபாய் டாக் டைம் 200 mb டேட்டா வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.