உங்களின் ஸ்மார்ட் போன் சில நேரங்களில் மெதுவாக இயங்க சில காரணங்கள் உள்ளன. அது ஸ்பீடாக இயங்க வைப்பது எப்படி என்பது குறித்து இதில் பார்க்கலாம். தொலைபேசி வேகம் குறைவதற்கு தவறான தரவு அல்லது வைஃபை இணைப்பு, காலாவதியான மென்பொருள் மற்றும் பயன்பாடுகள், பவர் ஹங்கிரி ஆப்ஸ், குறைந்த சேமிப்பு இடம் ஆகியவை பொதுவான காரணங்களாகும். Wi-fi சிக்னலை முதலில் சரிபார்க்க வேண்டும். இது நெட்வொர்க் சிக்கலாகவும் இருக்கலாம். இந்த இணைப்பை சரிபார்த்து மற்றொரு வைபை நெட்வொர்க்கிற்கு மாறவும் அல்லது வேறு இடத்திற்கு செல்லலாம்.

உங்களின் ஆண்ட்ராய்டு போன் அல்லது ஐபோன் எதுவாக இருந்தாலும் முதலில் ரீஸ்டார்ட் செய்ய வேண்டும். சிறிது நேரத்தில் உங்கள் மொபைலை ஸ்பீடாக இருக்கும். உங்களின் ஆண்ட்ராய்டு அல்லது ஐஓஎஸ் ஸ்மார்ட் போனுக்கான புதுப்பிப்புகளை சரிபார்க்க வேண்டும். ஆப்ரேட்டிங் சிஸ்டம் புதுப்பிப்புகள் மற்றும் பின்புல செயல்முறைகள் போன்ற போனை மெதுவாக்கும் சிக்கல்களுக்கான திருத்தங்களை கொண்டிருக்கும்.

இதில் எதுவாக இருந்தாலும் உங்களில் ஆண்ட்ராய்டு அல்லது ஐபோன் இயங்கு தளத்தை புதுப்பிக்க வேண்டும். நீங்கள் என்னை பயன்படுத்தாத ஆண்ட்ராய்டு பயன்பாடுகள் அல்லது ஐபோன் பயன்பாடுகள் நிறுவல் நீக்க வேண்டும். நீங்கள் பயன்படுத்தும் பயன்பாடுகளுக்கு அவை புதுப்பித்த நிலையில் இருப்பதை உறுதி செய்யவும். OS புதுப்பிப்புகளை போலவே பயன்பாட்டின் புதுப்பிப்புகளும் பெரும்பாலும் செயல்திறன் சிக்கல்களை ஏற்படுத்தக்கூடிய பிழை திருத்தங்களை கொண்டிருக்கும். உங்களின் ஆண்ட்ராய்டு அல்லது ஐபோனில் சேமிப்பிடத்தை காலி ஆக்க வேண்டும். இப்படி செய்தால் உங்களின் போன் வேகமாக இயங்கும்.