
JEE தேர்வுக்கு விண்ணப்பிக்கும் காலக்கெடுவை டிச.,4ஆம் தேதி வரை NTA நீட்டித்துள்ளது. 2024-25 கல்வியாண்டுக்கான JEE மெயின் தேர்வு வரும் ஜன., 24 முதல் பிப்., 1 வரை நடைபெறவுள்ளது. அதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு நவ., 30ஆம் தேதிவரை நடைபெற்றது. இந்நிலையில் தேர்வுக்கு விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என மாணவர்கள் தரப்பில் கோரிக்கை எழுந்தது. இதனையடுத்து NTA மேலும் அவகாசம் அளித்துள்ளது.