
சிறுபட தயாரிப்பாளர் சங்க தலைவராக இருப்பவர் அன்புச்செல்வன். இவர் சமீபத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டார். செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது,”பெண்களும் உடையில் கவனமாக இருக்க வேண்டும். பாவாடை, புடவை என்று அணிய வேண்டும். பெண்கள் அரைகுறை ஆடைகள் அணியும் போது தவறுகள் நடக்க தான் செய்யும். எப்பொழுதுமே எல்லா தவறுக்கும் ஆண்கள், ஆண்கள்தான் என சொல்வதா? பெண்களும் கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும்.
எந்த நாட்டில் தான் தவறு நடக்கவில்லை? எல்லா இடங்களிலும், எல்லா மாநிலங்களிலும் தவறு நடக்க தான் செய்கிறது. எனவே பெண்கள் ஒழுக்கமாக குடும்பப் பெண்ணாக இருந்தால் தான் எதிரே வரும் ஆண்கள் குடும்பப் பெண் என ஒதுங்கி செல்வார்கள். பெண்கள் அரைகுறை ஆடைகளுடன் சென்றால் தவறுகள் நடக்க தான் செய்யும். பெண்கள் தங்கள் உடையில் கவனமாக இருந்தால் தவறுகள் குறைய வாய்ப்புகள் உள்ளது”இவ்வாறு கூறியுள்ளார். இவரது பெண்கள் குறித்த சர்ச்சையான கருத்துக்கு கண்டனங்கள் வலுத்து வருகின்றன.