
உலகளவில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தினமும் அதிக பயனர்கள் வாட்ஸ்அப்-பை பயன்படுத்துகின்றனர். உலகம் முழுவதும் தற்போது வரை சுமார் 200 கோடிக்கும் அதிகமான பயனர்கள் வாட்ஸ்அப்-யை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடையும் வகையில் அவ்வபோது மெட்டா நிறுவனம் வாட்ஸ்அப்பில் புதிய அப்டேட்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது வாட்ஸ்அப் மெசஞ்சரில் பயனர்கள் படிக்காமல் விட்ட மெசேஜ்களை மூலம் சுருக்கி தரும் அம்சத்தை மெட்டா நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இதன் மூலம் பயனர்கள் பர்சனல் மற்றும் குரூப்பில் வரும் பெரிய மெசேஜ்களை நீண்ட நேரம் ஸ்க்ரோல் செய்து படிக்க வேண்டிய அவசியம் கிடையாது. அந்த மெசேஜ்கள் செய்திக்குறிப்பு போல சுருக்கி மெட்டா ஏஐ கொடுக்கும். அதே சமயம் வாட்ஸ்அப் பயனர்கள் மெட்டா ஏஐ-யிடம் படிக்காத மெசேஜ்களை சுருக்கமாக மாற்றி தரும்படி கட்டளையிட்டால் மட்டுமே இது செயல்படும்.
மேலும் இது பாதுகாப்பானதாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. தற்போது இந்த அம்சம் அமெரிக்காவில் வாட்ஸ்அப் பயனர்களுக்கு அறிமுகமாகியுள்ளது. மேலும் ஆங்கில மொழியில் உள்ள மெசேஜ்களை மட்டுமே தற்போது இந்த அம்சம் செயல்படுகிறது. வரும் நாட்களில் உலகம் முழுவதும் உள்ள பல்வேறு மொழிகளில் பயனர்கள் இந்த அம்சத்தை பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.