யூத பெண்கள்,  குழந்தைகள் என 150 பேரை பனைய கைதிகளாக ஹமாஸ் போராளிகள் காசநகரில் பிடித்து வைத்துள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. அவர்கள் அனைவரையும் மீட்கும் வரையிலும் இந்த போரின் தீவிரம் குறையாது எனவும் கூறப்பட்டுள்ளது. இஸ்ரேல் பனைய கைதிகளை மீட்பதற்கும்,  மத்தியஸ்தம் செய்வதற்கும் தாங்கள் தயாராக இருப்பதாக உலக செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது. இஸ்ரேலின் குழந்தைகள் இருவரை நேற்று இரவு ஹமாஸ் அமைப்பினர் காசா நகர் எல்லையிலிருந்து பத்திரமாக அனுப்பி வைத்த நிலையில்,  அது சர்வதேச ஊடகங்களில் காட்சியாக வெளியாகி உள்ளது.

ஏனெனில் ஹமாஸ் அமைப்பினர் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக தாக்குதல் நடத்துவதாக இஸ்ரேல் ஊடகங்கள் தெரிவித்திருந்த நிலையில்,  அதற்கு ஹமாஸ் அமைப்பினர் மறுப்பு தெரிவித்ததோடு மட்டுமல்லாமல், இரண்டு குழந்தைகளையும் பாதுகாப்பாக அனுப்பி வைத்துள்ளனர். பானையை  கைதிகளை போராளிகளிடமிருந்து மீட்டு விட்டால் ஓரளவிற்கு பிரச்சனையை கட்டுப்படுத்தலாம் என ஐநா போன்ற உலக மனித உரிமைகள் அமைப்புகள் கருதுகின்ற நிலையில்,  அவர்களை மீட்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில்தான் காசா நகரத்தில் தோண்ட தோண்ட கட்டட இடுப்பாடுகளில் இருந்து இறந்த பெண்கள் மற்றும் குழந்தைகளின் உடல்கள் எடுக்கப்படுவதாக காசாவின் சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். குறிப்பாக பாலஸ்தீன அப்பாவி மக்கள் இந்த இடுப்பாடுகளில் சிக்கி உள்ளனர். பாலஸ்தீன குழந்தைகளுடைய எண்ணிக்கை  அதிகமாகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக பாலஸ்தீன அரசின் அதிகாரப்பூர்வ வலைதள பக்கத்தில் தற்போது நான்கு புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

அதில் காசாவில் அல் அக்தா மருத்துவமனைக்கு வந்த பாலஸ்தீன தியாகக் குழந்தைகள் பிணவறையில் இருக்கும் காட்சிகள் என இதை பதிவிட்டு இருக்கிறது. குழந்தைகளுடைய சடலங்களின் புகைப்படங்களில் வெளியாகி இருக்கிறது. இந்த புகைப்படங்கள் இஸ்லாமிய கூட்டமைப்பு நாடுகளிடையே கடும் கண்டனத்தையும் ஏற்படுத்தி உள்ளது. மேலும் இஸ்ரேலின் தாக்குதலில் இதுவரை காசா நகரத்தில் 250க்கும் மேற்பட்ட குழந்தைகள் இறந்துள்ளதாக கூறப்படுகிறது. இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே நடைபெற்று வரும் இந்த போர் குழந்தைகள் மற்றும் பெண்கள் அதிக பாதிப்புக்குள்ளாவதை காட்டுகிறது. இஸ்ரேல் தரப்பிலும் பாலஸ்தீன தரப்பிலும் குழந்தைகள் அதிகமாக மரணமடைந்துள்ளனர்.

இஸ்ரேலை பொறுத்தவரை அவர்கள் ஹமாஸ் அமைப்பு எல்லை பாலஸ்தீன எல்லைப் பகுதிக்குள் இருக்கக்கூடாது. ஹமாஸ் ஒரு தீவிரவாத அமைப்பு என குற்றம் சாட்டியுள்ளது.  அதோடு மட்டுமல்லாது அவர்களை தடை செய்ய வேண்டும். அவர்களுக்கு வரும் நிதி உதவிகள் ஆயுதங்கள் உள்ளிட்ட அனைத்து விதமான தகவல்களையும் நிறுத்த வேண்டும். தொடர்புகளையும் ரத்து செய்ய வேண்டும்.  ஹமாஸ் அமைப்பை முற்றிலும் அழிக்க வேண்டும் என்பதுதான்  இஸ்ரேல் உடைய முக்கியமான திட்டமாக இருக்கிறது.

எனவே தான் ஹமாஸ் அமைப்பின் தலைவர்கள் தங்கி இருக்கும் கட்டிடங்கள்,  நிதி பரிமாற்றங்கள், அவர்களுடைய சுரங்கப்பாதைகள் என அனைத்தையும் தாக்குதல் நடத்தி நிர்முலமாக்கி வருகின்றன.

குறிப்பாக காசா நகரத்தில் ரெண்டரை கிலோ நீளத்திற்கு ஹமாஸ் அமைப்பினருடைய சொர்கபூரி  என கூறப்படுகின்ற சுரங்க அமைப்பில் தான்ஹமாஸ் அமைப்பின் ஆயுதங்கள், ஆயுதக்கடங்குகள் மற்றும் அவர்களுடைய செயல்பாடுகளுக்கு முக்கியத் தலமாக விளங்குகிறது. எனவே தற்போது சுரங்கப்பாதையை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருவதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் – ஹமாஸ்-க்கு இடையே இந்த போர் நடைபெற்ற்று வரும் நிலையில் லெபனான், ஜோர்டான் பகுதிகளில் இருந்தும் ஹெஸ்புல்லா தீவிரவாதிகளுக்கும் – இஸ்ரேல் படைகளுக்கும் இடையே சண்டை தொடர்ந்து நீடித்து வருகிறது. இஸ்லாமிய கூட்டமைப்பு நாடுகளான எகிப்து, குவைத், சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகள் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஈரானுடைய அதிபர் எகிப்தினுடைய அதிபரோடு தற்போது ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றார். இஸ்லாமிய கூட்டமைப்பில் 61 நாடுகள் இருக்கிறார்கள். அனைத்து உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுத்து, பாலஸ்தீன மக்கள் பாதிக்கப்படுவது குறித்தும், அகதியாக வரும் மக்களுக்கு உதவிகள் மேற்கொள்வது குறித்தும் ஆலோசனை நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. தற்போதைய நிலைப்படி 6ஆவது நாளில் இஸ்ரேல் – பாலஸ்தீனம் எல்லைப் பகுதிக்கு உட்பட்ட பகுதியில் நடந்து வரும் இந்த போர் மனித உரிமை மீறலின் உச்சகட்டமாக இருக்கிறது. குழந்தைகள்,  பெண்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.