ஹமாஸ்  போராளிகளுக்கு எதிரான இந்த போரில் இஸ்ரேல் ராணுவம் 6ஆவது நாளில் வெகுவேகமாக முன்னேறி வருகிறது. குறிப்பாக 51 கிலோமீட்டர் நீளமும்,  21 கிலோமீட்டர் அகலமும் கொண்ட செவ்வக பரப்பாக காசா பகுதி அமைந்துள்ளது. காசாவைப் பகுதியை சுற்றி மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட  இஸ்ரேலிய இராணுவம் வீரர்கள் தற்போது முற்றுகையிட்டு வரும் நிலையில்,  தடை செய்யப்பட்ட ஆயுதங்களை பயன்படுத்தி, போர் குற்றங்களில் இஸ்ரேல் ஈடுபட்டு  வருவதாக பாலஸ்தீன வெளியுறவுத்துறை அமைச்சகம் தற்போது குற்றம் சாட்டியுள்ளது.

இஸ்ரேல் ராணுவம் பயன்படுத்தப்படும் அனைத்து விதமான ஆயுதங்களும் சர்வதேச நாடுகளினாலும், ஐநா சபையினாலும்,  மனித உரிமை அமைப்பினாலும் தடை செய்யப்பட்ட ஆயுதங்களாக உள்ளது. எனவே இது பெரிய போர் குற்றமாக கருதலாம். இந்த போர் குற்றத்தில்  ஈடுபடும் இஸ்ரேலிய அரசின் மீதும்,  இஸ்ரேலிய இராணுவம் மீதும் சர்வதேச நாடுகள் எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும் என பாலஸ்தீன வெளியுறவுத் துறை அமைச்சகம் கூறியுள்ளது.

மேலும் காலணித்துவ மனப்பான்மையோடு போராளிகள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது என்கின்ற பேரில் அப்பாவி பாலஸ்தீன மக்கள் பலியாகி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அல் – சாவியா நகரத்தில் மீதான தாக்குதலில் இஸ்ரேலின் களியாட்டங்கள் மற்றும்  குடிமக்கள் பழிவாங்குதல் அதிகமாக உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. பெண்களும், குழந்தைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக தடை செய்யப்பட்ட ஆயுதங்கள் என கூறும் போது,  அதிக செறிவுள்ள பாஸ்பர குண்டுகள்.  குறிப்பாக ஒயிட் பாஸ்பரஸ் குண்டுகள் என்பார்கள். அதை பயன்படுத்துவதாக தெரிவிக்கப்படுகிறது. அதிகம் செறிவுமிக்க ஏவுகணைகளை பயன்படுத்துவதாகவும் கூறப்படுகிறது. கையேறி குண்டுகள் பயன்படுத்துவதாகவும் கூறப்படுகிறது. தடை செய்யப்பட்ட கண்ணீர் புகை குண்டுகளையும் பயன்படுத்துவதாகவும்,  விமானப்படை தாக்குதல் பள்ளிகள் மீதும், முதியோர்கள் வாழும் இல்லங்கள் மீதும், மசூதிகள் மீதும் விழுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எனவே இவை அனைத்தும் போர் குற்றங்கள். அப்பாவி மக்கள் இறக்கின்றார்கள்.   காசாவில் உள்ள 12க்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் சேதம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. 40க்கும் மேற்பட்ட பள்ளிகள் முற்றிலும் செய்தமடைந்துள்ளதாக பாலஸ்தீன வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது அனைத்துமே மனித உரிமைக்கு மீறிய ஒரு போர் குற்றமாக கருதப்படும்.  தடை செய்யப்பட்ட ஆயுதங்களை பயன்படுத்தி,  பாலஸ்தீன மக்களை கொன்று குவித்து வருவதாக பாலஸ்தீன வெளியுறவுத்துறை அமைச்சகம் தற்போது தங்களது கருத்துக்களை கூறி உள்ளது.