டெல் அவிவில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் சந்தித்தார்.

இஸ்ரேலுக்கு முழு ஆதரவு என அமெரிக்கா அறிவித்துள்ள நிலையில் தான் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன்  டெல் அவிவ் நகருக்கு சென்று இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகுவை சந்தித்து பேசி இருக்கிறார். ஏற்கனவே இஸ்ரேலுக்கு அமெரிக்க போர்க்கப்பல்கள் மற்றும் போர் விமானங்கள் சென்றடைந்துள்ளன. இதைத்தொடர்ந்து அமெரிக்காவின் ஆதரவை மேலும் தெளிவாக உறுதிப்படுத்தும் வகையிலே ஆண்டனி பிளிங்கன்  இஸ்ரேல் சென்று,

இஸ்ரேலிய பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்தி தற்போதைய போர் நிலவரம், பிணை கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்ட அமெரிக்கர்களின் நிலை என்ன ? மற்றும் இஸ்ரேலில்  நடைபெற்ற தீவிரவாத தாக்குதலிலே கொல்லப்பட்ட அமெரிக்கர்கள் விவரம் என்ன  போன்றவற்றையெல்லாம் கேட்டு அறிந்திருக்கிறார்.

ஹமாஸ் தீவிரவாத தாக்குதலிலேயே இஸ்ரேலியர்களை தவிர பல அமெரிக்கர்களும் கொல்லப்பட்டிருக்கிறார்கள். பல அமெரிக்கர்கள் கைதிகளாக பிடித்தும் செல்லப்பட்டு இருக்கிறார்கள். ஆகவே அமெரிக்ர்களுடைய நிலை என்ன என்பதை தெரிந்து கொள்ள மிகவும் அமெரிக்கா தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. ஏற்கனவே தூதரக அதிகாரிகள் மூலமாக பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. இத்தகைய சூழ்நிலையில் தான் ஆண்டனி பிளிங்கன் நேரடியாக சென்று இஸ்ரேலுக்கு முழு ஆதரவு என மீண்டும் வலியுறுத்தி இருக்கின்றார்.

மேலும் அமெரிக்க கைதிகளை பத்திரமாக மீட்க வேண்டும். அதற்கான நடவடிக்கைகள் என்ன ?   எந்தெந்த நாடுகள் மூலம் பேச்சுவார்த்தை நடைபெறுகின்றது ? என்பதெல்லாம் கேட்டுள்ளார். எகிப்து உள்ளிட்ட பல்வேறு நாடுகள் மூலமாக பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. கைதிகளை விடுவிப்பதற்கு பதிலாக ஹமாஸ் என்ன கோரிக்கை வைக்கிறது ? அதை இஸ்ரேல் நிறைவேற்ற ஒத்துக் கொள்கிறதா ? போன்ற பல்வேறு விஷயங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. இஸ்ரேல் தாக்குதல் மேலும் தீவிரமடைந்துள்ள நிலையில் தான் தற்போது ஆண்டனி பிளிங்கன்  இஸ்ரேல் சென்றது குறிப்பிடத்தக்கது.