இஸ்ரேலும், ஈரானும் இடையே நடந்த 12 நாட்கள் போரில் மிகப்பெரிய தாக்குதலை ஜூலை 4 ஆம் தேதி இஸ்ரேல் நடத்தியது. அந்த தாக்குதலில் ஈரான் தலைநகரான தெஹ்ரானில் உள்ள முக்கிய அரசாங்க கட்டிடம் குறிவைக்கப்பட்டது.

அந்த தாக்குதலின் சிசிடிவி காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகி பரவியுள்ளன. அந்த காட்சிகளில், தாக்குதலுக்குப் பிறகு கார்கள் காற்றில் பறக்கும், கட்டிடங்கள் இடிந்து விழும் திகிலூட்டும் தருணங்கள் பதிவாகியுள்ளன.

இந்த தாக்குதல் “ரையசிங் லயன்” நடவடிக்கையின் ஒரு பகுதியாக நடைபெற்றதாக கூறப்படுகிறது. இஸ்ரேலின் விமானப்படை இந்த தாக்குதலை நடத்தியது. அதில் 2 ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டதாக தெரிகிறது.

அதில் ஒன்று அரசாங்க கட்டிடத்தை நேரடியாக தாக்கியது. இன்னொன்று தவறி அருகிலிருந்த தாஜ்ரிஷ் ரவுண்டானா பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த பல கார்கள் மீது விழுந்து, அதனைச் சேதப்படுத்தியது.

அந்த தாக்குதலில் மொத்தம் 935 ஈரானியர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதில், அணு விஞ்ஞானிகள், இராணுவத் தளபதிகள் போன்ற முக்கிய அதிகாரிகள் உள்ளனர்.

அதேசமயம், ஈரானின் அணு ஆயுத தளங்கள், இராணுவக் கிடங்குகள் உள்ளிட்டவை இந்த தாக்குதலில் பூரணமாக அழிக்கப்பட்டன. வீடியோவில் கட்டிடங்கள் தூசாக மாறும் காட்சிகள், ஹாலிவுட் படங்களை போல் காணப்பட்டன என்று மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்த தாக்குதலுக்கு பதிலளிக்க ஈரானும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. ஆனால் அதில் 26 பேர் மட்டுமே உயிரிழந்ததாக இஸ்ரேலின் ராணுவம் தெரிவித்துள்ளது.

அந்த போர் முடிந்தாலும், இதுபோன்ற தாக்குதல்களின் பயம் இன்னும் தொடர்கிறது. தற்போது இந்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாக பரவி மக்கள் அதிர்ச்சியிலும், பயத்திலும் உள்ளனர்.