இஸ்ரேல் – ஹமாஸ் குழுவினருக்கிடையே போரை நிறுத்த சர்வதேச நாடுகளுக்கு பாலஸ்தீன அரசு அழைப்பு விடுத்திருக்கிறது. காசா  நகரில் அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்யுமாறு பாலஸ்தீன் அரசு வலியுறுத்தி உள்ளது.

பாலஸ்தீனத்திற்கு எதிராக போர் என இஸ்ரேல் அறிவித்திருந்தாலும்,  இது ஹமாஸ் போராளிகளுக்கான போர் என அவர்கள் தெரிவிக்கிறார்கள். ஆனால் பாதிக்கப்படுவது பாலஸ்தீன சாமானிய மக்கள்தான். இந்நிலையில் போரை உடனடியாக நிறுத்த வேண்டும். இது ஒரு பைத்தியக்காரத்தனமான போர் என  பாலஸ்தீனத்தினுடைய வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் அறிக்கையாக வெளியிடப்பட்டுள்ளது.

அந்த அர்க்க்கையில், இங்குள்ள சர்வதேச மனித உரிமை அமைப்புகளும், நாடுகளும், ஒன்றிணைந்து இந்த போரை நிறுத்த வேண்டும். இதில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பாலஸ்தீனத்தில் உள்ள மேற்கு பகுதியான  காசாவில் பதற்றமான நிலை நீடிக்கிறது. இது தற்போது இஸ்ரேல் உடைய கட்டுப்பாட்டில் இருக்கு என்று தான் சொல்லப்படுகின்றது. ஆனால் மேற்கு பகுதிகளில் குறிப்பாக வெஸ்ட் பேங்க் என்பார்கள். அந்தப் பகுதியில் இருக்க கூடிய மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும், தங்களுடைய உடமைகளை பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும்,  அங்கு அவசர நிலையை அறிவிப்பதாக  பாலஸ்தீன அரசு கூறியுள்ளது.

மேலும் மக்கள் தங்களுடைய உடைமைகளை பாதுகாப்பதோடு மட்டுமின்றி,  இஸ்ரேல் ராணுவத்தால் ஏதாவது அச்சுறுத்தல் ஏற்பட்டால்,  அந்தக் குற்றத்தை ஆவணப்படுத்தும் நோக்கில் நீங்கள் வீடியோக்களாகவும்,  போட்டோக்களாகவும் அவை அனைத்தையும் எடுக்க வேண்டும். மனித உரிமை மீறல்களை உலகிற்கு காட்ட வேண்டும் என பாலஸ்தீன அரசு தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகின்றது.