
“விடுதலை 2” திரைப்படத்தை தனது தனது கழக உறுப்பினர்களுடன் இணைந்து விசிக தலைவர் திருமாவளவன் பார்த்துள்ளார். இந்த நிலையில் இப்படம் குறித்து செய்தியாளர்களிடம் பேசியுள்ளார். இதில் அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். அதாவது இந்தத் திரைப்படத்தில்”கோட்பாடுகள் இல்லாத தலைவர்கள் வெறும் ரசிகர்களை மட்டுமே உருவாக்குவார்கள்”என்ற வசனம் இடம் பெற்றுள்ளது.
இது விஜயின் அரசியலை விமர்சிப்பது போல் உள்ளதாக பலரும் கூறுகின்றனர். இது குறித்து திருமாவளவனின் கருத்து கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த திருமாவளவன் கூறியதாவது, விடுதலை 2 படத்தில் இடம்பெற்ற அந்த வசனம் “குறிப்பிட்ட நபரை மட்டுமே மனதில் வைத்து எழுதப்பட்டதல்ல, உலகில் உள்ள அனைத்து அரசியலுக்கும் இது பொருந்தும்” எனக் கூறியுள்ளார்.