நீர்வளத்துறை முதன்மை பொறியாளர் முத்தையாவிடம் அமலாக்கத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அளவிற்கு அதிகமாக மணல் அள்ளப்பட்டதாக வந்த தகவலை அடுத்து கடந்த செப்டம்பர் முதல் குவாரிகளில் ED சோதனை மேற்கொண்டு வந்தனர். அங்கு கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் நுங்கம்பாக்கத்தில் இருக்கும் ED அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில்,  விசாரணைக்காக தற்போது முத்தையா ஆஜராகி உள்ளார்.

நீர்வளத் துறை முதன்மைச் செயலாளர் முத்தையா மீதான ED சோதனை திமுக சீனியர் அமைச்சர் துரைமுருகனுக்கு வைக்கப்படும் செக் என அரசியல் வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றன. மணல் குவாரி முறைகேடு தொடர்பாக அமைச்சரின் மகனும் எம்பியுமான கதிர் ஆனந்தை வளையத்திற்குள் கொண்டு வர டெல்லி மேலிடம் திட்டமிட்டுள்ளதாம். மஞ்சள் தூள் பிசினஸ்,  லண்டன் ஹோட்டல் உள்ளிட்ட வெளிநாடு முதலீடுகளை ED குறி வைத்திருப்பதாக விவரம் அறிந்தோர் சொல்கிறார்கள்.