
பிரபல பாடகியான ஆஷா போஸ்லே பேத்தி ஜனாய் போஸ்லே ஒரு பாடகி. இவர் பாலிவுட் திரை உலகின் நடிகை. சமீபத்தில் சந்திப் சிங் இயக்கத்தில் ஜனாய் போஸ்லே “சத்ரபதி சிவாஜி”படத்தில் நடித்து வருகிறார். தனது 23 வது பிறந்தநாள் பாட்டியில் கிரிக்கெட் வீரர் சிராஜுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். ரசிகர்களிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
கிரிக்கெட் வீரரான சிராஜ், பாலிவுட் நடிகையான ஜனாய் போஸ்லேவும் காதலிப்பதாக வதந்திகளை பரப்பி வந்துள்ளனர். இதற்கு இருவரும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருவரும் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை வெளியீட்டு ஒருவருக்கொருவர் அண்ணன், தங்கை என பதிவிட்டு காதல் சர்ச்சைக்கு முடிவு வைத்தனர்.
விராட் கோலி, அனுஷ்கா சர்மா போன்ற அடுத்து ஒரு காதல் கதை என ரசிகர்கள் எதிர்பாத்த நிலையில் ரசிகர்களின் கற்பனைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர். கிரிக்கெட் வீரர் சிராஜ் தற்போது நடந்த ஐ.பி.எல் ஏலத்தில் ரூபாய் 12.25 கோடிக்கு வாங்கப்பட்டு குஜராத் அணிக்காக குஜராத் டைட்டன்ஸ் அணியில் விளையாட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.