தமிழகத்தில் மும்மொழிக் கொள்கைக்கு எதிராக பலரும் குரல் கொடுத்து வரும் நிலையில் சமீபத்தில் சமூக வலைதளங்களில் டாஸ்மாக் மதுபான கடைகளை மூன்று மொழிகளில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ள புகைப்படம் வைரலாக பரவி வருகிறது. இரு மொழிக் கொள்கை மட்டுமே கடைபிடிக்கப்படும் எனக் கூறிய திமுக அரசு முதலில் டாஸ்மாக்கில் மும்மொழிக் கொள்கை திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது என பலரும் விமர்சித்து வந்தனர்.

இதுகுறித்து தமிழக அரசு தகவல் சரி பார்ப்பகம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதில் கூறப்பட்டுள்ளதாவது, இது மிகப் பழைய புகைப்படம். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள முதலைப்பட்டி அருகே டாஸ்மாக் உரிமையாளர் ஒருவரால் வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகை ஆகும். இதுகுறித்து உடனே நடவடிக்கை எடுக்கப்பட்டு இந்தப் பலகை அகற்றப்பட்டுள்ளது. இந்த பழைய புகைப்படத்தை தற்போது வைரல் ஆக்கி வருகின்றனர் என விளக்கம் அளித்துள்ளது.