தமிழகத்தில் அரசு மதுபான கடைகளில் கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் எழுந்து வருகிறது. இந்நிலையில் மதுக்கடை மற்றும் பார்களில் முறைகேடுகள் நடைபெறுவது கண்டறியப்பட்டால் அதற்கு மாவட்ட மேலாளர்களே முழு பொறுப்பு என டாஸ்மாக் நிர்வாகம் எச்சரித்துள்ளது.

டாஸ்மாக் கடைகளில் அரசு நிர்ணயம் செய்த விலையை விட கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்கப்படுவதாக புகார்கள் எழுகிறது. இந்த குற்றம் நிரூபிக்கப்பட்டால் மாவட்ட மேலாளர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள். மேலும் மாவட்ட மேலாளர்கள் மீது துறைவாரியாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் டாஸ்மாக் நிர்வாகம் எச்சரித்துள்ளது.