ஐபிஎல் 2024க்கான மினி ஏலம் டிசம்பர் 19-ம் தேதி துபாயில் உள்ள கோகோ கோலா அரங்கில் நடைபெற உள்ளது. எனவே இன்றைக்குள் ஒவ்வொரு அணியும் தக்கவைத்துள்ள வீரர்கள் மற்றும் விடுவிக்கப்ட்டுள்ள வீரர்கள் பட்டியலை வெளியிட வேண்டும் என காலக்கெடு வழங்கப்பட்டது. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் ஏலத்திற்கு முன்னதாக டெல்லி கேப்பிடல்ஸ் வெளியிடப்பட்ட, தக்கவைக்கப்பட்ட மற்றும் வர்த்தகம் செய்யப்பட்ட வீரர்களின் முழுமையான பட்டியல் இதோ.

டெல்லி கேப்பிடல்ஸ் – தக்கவைக்கப்பட்ட வீரர்கள் :

ரிஷப் பந்த், பிரவின் துபே, டேவிட் வார்னர், விக்கி ஆஸ்ட்வால், பிரித்வி ஷா, அன்ரிச் நார்ட்ஜே, அபிஷேக் போரல், குல்தீப் யாதவ், அக்சர் படேல், லுங்கி என்கிடி, லலித் யாதவ், கலீல் அகமது, மிட்செல் மார்ஷ், இஷாந்த் சர்மா, யாஷ் துல், முகேஷ் குமார்.

டெல்லி கேபிடல்ஸ் – விடுவிக்கப்பட்ட வீரர்கள் :

ரிலீ ரோசோவ், சேத்தன் சகாரியா, ரோவ்மேன் பவல், மணீஷ் பாண்டே, பில் சால்ட், முஸ்தாபிசுர் ரஹ்மான், கமலேஷ் நாகர்கோட்டி, ரிபால் பட்டேல், சர்பராஸ் கான், அமன் கான், பிரியம் கார்க்.