இந்தியா- பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட போர் பதற்றம் காரணமாக 18ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது இரு நாடுகளும் சமாதான முடிவை மேற்கொண்ட பின் போர் பதற்றம் தணிந்துள்ளது.

எனவே இந்திய கிரிக்கெட் வாரியம் விளையாட்டுடன் சம்பந்தப்பட்டவர்களுடன் நடத்திய ஆலோசனை முடிவில் வரும் மே 17ஆம் தேதி மீண்டும் போட்டிகளை தொடங்குவதாக அறிவித்துள்ளது.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, இந்தியாவில் ஏற்பட்ட தீவிரவாத தாக்குதலில் சிலர் தங்களுக்கு நெருக்கமானவர்களை இழந்துள்ளனர்.

எனவே அவர்களது உணர்வுகளுக்கு மதிப்பளித்து ஐபிஎல் போட்டிகளில் பாடல்கள், டிஜே, பெண்கள் நடனம் என எதுவும் இருக்க வேண்டாம் என விரும்புகிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்காக ஐபிஎல் போட்டிகளில் கொண்டாட்டங்களை தவிர்க்க வேண்டும் என கவாஸ்கர் கோரிக்கை வைத்துள்ளார்.