ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் காத்திருக்கும் ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற உள்ளது. இந்த நிலையில் வீரர்களை தேர்ந்தெடுக்கும் ஏலம் நவம்பர் மாதம் 24 மற்றும் 25ஆம் தேதி களில் நடைபெற உள்ளது. ஏற்கனவே அக்டோபர் மாதம் 31ஆம் தேதி 10 அணிகளும் தாங்கள் தக்க வைத்துக் கொள்ளும் வீரர்களை அறிவித்து விட்டன. இந்த நிலையில் ஏலத்தில் ரிஷப் பண்ட், லோகேஷ் ராகுல், ஸ்ரேஷ் ஐயர், அர்ஷ் திப் சிங் போன்ற சிறந்த வீரர்கள் ஏலத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இதில் சிறந்த பேட்ஸ்மேன் மற்றும் விக்கெட் கீப்பரான ரிஷப் பன்ட் எந்த அணி ஏலத்தில் எடுக்கப் போகிறது? என்ற கேள்வி பலரிடம் எழுந்துள்ளது. இதுகுறித்து இந்தியாவின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா கூறியதாவது, பெங்களூரு அல்லது பஞ்சாப் பணியினர் ரிஷப் பன்டை ஏலத்தில் எடுப்பர். ஏனெனில் ஏற்கனவே பஞ்சாப் அணி 83 கோடி வைத்துள்ளது. அதேபோன்று பெங்களூர் அணி 110 கோடி வைத்துள்ளது. ரிஷப் பண்ட் குறைந்தது 25 முதல் 26 கோடி ரூபாய் வரை ஏலத்தில் எடுக்கப்படுவார் என எதிர்பார்க்கிறேன்.

அவரது சிறந்த விக்கெட் கீப்பிங் மற்றும் பேட்டிங் திறமைக்காகவே அவர் 25 கோடிக்கு மேல் ஏலத்தில் எடுக்கப்படுவார்.  எந்த அணிக்கு சென்றாலும் அல்லது வேறு ஏதாவது ஒரு அணிக்கு சென்றாலும் அவர் அந்த அணியின் கேப்டனாக அமையக்கூட வாய்ப்புள்ளது என தெரிவித்தார்.