அடுத்த வருடம் ஐபிஎல் போட்டி மெகா ஏலம் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு பிசிசிஐ சில முக்கிய அறிவிப்புகளையும் அறிவுறுத்தல்களையும் வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பின்படி ஒவ்வொரு அணியும் தலா 6 வீரர்களை தக்க வைக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் சர்வதேச போட்டிகளில் விளையாடியவர்களில் 5 பேரையும், உள்நாட்டு போட்டிகளில் மட்டுமே விளையாடி உள்ள UNCAPPED வீரர்களில் அதிகபட்சம் இருவரையும் தக்க வைக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை குறிப்பிட்ட தொகையில் தக்க வைக்கும் ‌RETENTION எனும் முறையில் வீரர்களை விடுவித்துவிட்டு அவர்களை ஏலம் போகும் தொகையை கொடுத்துவிட்டு அந்த வீரர்களை திரும்ப பெற்றுக் கொள்ளும் RTM எனும் முறையை பின்பற்றலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த முறையை பயன்படுத்தி ஒவ்வொரு அணியும் தங்கள் அணியில் சிறப்பாக உள்ள வீரர்களை தக்க வைக்கலாம் என்று பிசிசிஐ தெரிவித்துள்ள நிலையில் ரசிகர்கள் மத்தியில் உற்சாகம் ஏற்பட்டுள்ளது.