
IPL 2025 தொடக்கப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதவுள்ள நிலையில், ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்றும் இந்த ஆட்டத்தில் கேப்டன் அஜிங்க்யா ரகானேவை சுற்றி கவனம் செலுத்தப்பட உள்ளது. ஆனால், மழை போட்டியை பாதிக்கக்கூடிய வாய்ப்பு இருப்பதால் ரசிகர்கள் சற்றே கவலையுடன் உள்ளனர். இந்நிலையில், ஆட்டத்திற்கு முன்பாக கேக்ஆர் முகாமில் ஒரு சுவாரசியமான சம்பவம் நடந்துள்ளது. ரகானே, பஸ்ஸை மிஸ் செய்யும் நிலையில் ஓடிச் சென்று பஸ்ஸை பிடித்த காட்சி வீடியோவாக இணையத்தில் வைரலாகியுள்ளது.
இன்று நடைபெறும் தொடக்கப் போட்டிக்கான கொல்கத்தாவின் வானிலை, அதிகபட்சம் மழை வாய்ப்பு கொண்டதாக கூறப்படுகிறது. காலை மிதமான மழை பெய்தது என்றாலும், மாலை 6 மணி முதல் 10 மணிவரை 40% மழை வாய்ப்பு உள்ளது. மழையால் இருவருக்கும் பயிற்சிகள் பாதிக்கப்பட்டுள்ளன. ஈடன் கார்டன்ஸில் முன்கூட்டியே உரை போடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. மைதானத்தின் நிலப்பரப்பு பெரியது என்பதால், ஆட்டம் தொடங்கினால் பவுண்டரிகளும், சிக்ஸுகளும் கொண்ட விழாவாக தான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.